- சைமண்டெக்கின் மேம்படுத்தப்பட்ட வைரஸ் கோப்பு அகராதி மேம்படுத்தலைப் பதிவிறக்கிக் கொள்ளவும்.
- மேலேயுள்ள சைமண்டெக் பக்கதில் உள்ள i32.exe அல்லது x86.exe என்று முடிவடையும் கோப்பினைப் பதிவிறக்கிக் கொள்ளவும் (2ஆவதாக அல்லது 3ஆவதாக இருக்கும் இணைப்பு)
- மேலே பதிவிறக்கிய கோப்பினை 7-ஜிப் அல்லது வேறேதேனும் கோப்பினைப் பிரிக்கும் (எடுத்துக்காட்டாக வின்ரார், வின்ஜிப்) கோப்புப் பிரயோகத்தினைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும். அதில் உள்ள VIRSCAN.ZIP என்ற கோப்புத்தான் தேவையானது இதை VDEFHUB.ZIP என்றவாறு பெயர் மாற்றிக் கொள்ளவும்.
- மேலேயுள்ள கோப்பைகொண்டு இறுவட்டில் (CDROM) இலிருந்து பிரதிசெய்த SAV கோப்புறைக்குள் (Folder) உள்ள VDEFHUB.ZIP கோப்பை மாற்றீடு (replace) செய்யவும். பின்னர் இதை மீளவும் இறுவட்டாக ஆக்கிக் கொள்ளவும். பின்னர் கணினியில் நீங்கள் சைமண்டெக் காப்பரேட் எடிசனை நிறுவும் பொழுது புது வைரஸ் அகராதியுடன் நிறுவப்பட்டு விடும்.
Monday, April 20, 2009
சைமண்ட்டெக் ஆண்டிவைரஸ் நிறுவும் பொழுதே தற்போதைய வைரஸ் அகராதியுடன் நிறுவுதல்
சைமண்டெக் ஆண்டிவைரஸ் காப்பரேட் எடிசனில் ஒரு சிறப்பு என்னவென்றால் நிறுவும்பொழுதே அதன் இற்றைப்படுத்தப்பட்ட வைரஸ் அகராதியுடன் (upto date Antivirus definitions) நிறுவக் கூடியதாக இருப்பதாகும். இதற்கான வழிமுறையை இந்த வலைப்பதிவில் பார்ப்போம். இக்கட்டுரை சைமண்டெக் காப்பரேட் பதிப்பு 10.2 உடன் சோதித்துச் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்திய பின்னரே இவ்வலைப்பதிவைப் பதிந்துள்ளேன். வேறேதும் சைமண்டெக் பதிப்பில் பிரச்சினை இருந்தால் தயவு செய்து தயங்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment