Tuesday, January 27, 2009

ஸ்கைப்

இணையமூடாக ஒலியழைப்புக்களை மேற்கொள்வதில் மிகவும் பிரபலாமான மென்பொருள் ஸ்கைப். இதில் காவிச் செல்லகூடிய செல்ஸ்கைப் உம் வெளிவந்துள்ளது. இது ஆரம்பத்தில் ஜான் டீ ஹாலரின் கைவண்ணத்தில் உருவாகியது. இந்தப் பதிப்பை நேரடியாகப் பதிவிறக்கும் வசதி இன்னமும் அதிகாரப் பூர்வமாகக் கிடையாது. மேலும் இதன் 4ஆவது பதிப்பின் 3ஆவது பீட்டாப் பதிப்பு இணையத்தளத்தில் கிடைத்தாலும் அது செல்பதிப்பில் இன்னமும் நான் காணவில்லை. ஆகவே இவ்விரண்டு பதிப்புக்களையும் இணையத்தில் மேலேற்றியுள்ளேன் தேவையானவர்கள் பதிவிறக்கம் செய்து பாவிக்கவும். இதற்கு நிர்வாக அணுக்கம் தேவையில்லை.
  1. செல்ஸ்கைப் 3.8ஆம் பதிப்பு
  2. செல்ஸ்கைப் 4 இன் 3ஆவது பீட்டாப் பதிப்பு.
பதிவிறக்கியதும் இரண்டுதடவை கிளிக் செய்து பிரித்தெடுக்கவும். பின்னர் போட்டபிள் ஸ்கைப் ஐகானை இரண்டுதடவை கிளிக் செய்வதன் மூலம் ஆரம்பிக்கலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்கைப் ஐ ஆரம்பிக்க விரும்புபவர்கள் ஸ்கைப் நிறுவப்பட்டிருந்தால் C:\Program Files\Skype\Phone கோப்புறைக்குச் சென்று Skype.exe அல்லது நீங்கள் மேலேயுள்ளதை நீங்கள் பதிவிறக்கிக் பாவித்தால் PortableSkype இற்கே நீங்கள் குறுக்குவழி (Shortcut) உருவாக்குங்கள். பின்னர் குறுக்குவழியின் குணாதியங்களைத் (Properties) தேர்ந்தெடுத்து குறுக்குவழி தத்தலில் (Tab) இல் PortableSkype.exe" /secondary (இதில் /secondary என்பதைத் தட்டச்சுச் செய்யவும்) அவ்வளவுதான் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்கைப்பை ஒரே நேரத்தில் பாவிக்கலாம்.

Thursday, January 15, 2009

விசியோ 2003 உடன் சேவைப் பொதி் 3 ஐச் சேர்க்கும் முறை

நான் விரும்பும் மென்பொருட்களில் ஒன்று மைக்ரோசாப்ட் விசியோ. இதில் இலகுவாக வலையமைப்பு வரைபடங்களை வரையலாம். இதன் 2003 பதிப்பில் சேவைப் பொதியினை சேர்க்கும் வழிமுறைகளை இந்த வலைப் பதிவில் பார்ப்போம். விசியோ 2003 சேவைப் பொதி 3 இப்போதைக்கு மிகப் பிந்தைய சேவைப் பொதி. இதை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் வைத்திருக்கும் விசியோஐ முதலில் Start -> Run ->"E:\SETUP.EXE" /a (இங்கு E: என்பது இறுவட்டு இயக்கியாகும். விசியோவை உங்கள் கணினியில் பிரதிசெய்திருந்தால் E: ஐ உரிய வழியைக் காட்டிவிடவும் எடுத்துக் காட்டாக "E:\Software\Office\Microsoft Visio 2003 Professional Edition\SETUP.EXE" /a) இங்கு a என்பது நிர்வாக என்பதன் ஆங்கிலச் சொல்லான Adminitrative இல் இருந்து வந்ததாகும். இப்போது எங்கே பிரதிபண்ணுவது
என்று கேட்கும். இடத்தைக் காட்டிவிட்டதும் பிரதி பண்ணும். இந்த எடுத்துக்காட்டில் நீங்கள் K:\Visio2003 நீங்கள் சேமித்தாக எடுத்துக் கொள்கின்றேன்.

பின்னர் நீங்கள் பதிவிறக்கம் செய்த விசியோ சேவைப் பொதி மூன்றைப் பிரித்தெடுக்கவும் இதற்கு 7-ஜிப், வின்சிப், வின்ரார் போன்ற மென்பொருட்கள் உதவலாம். இதை நீங்கள் விரும்பிய கோப்புறையின் பெயரில் சேமிக்கவும் இந்த எடுத்துக் காட்டில் நீங்கள் K:\Visio2003SP3 இல் சேமித்தாக எடுத்துக் கொள்கின்றேன். இப்பொழுது மீண்டும் command prompt இல் சென்று (Start -> Run)
msiexec /p K:\Visio2003SP3\VISIOSP3.msp /a K:\Visio2003\VISPRO.MSI shortfilenames=true /qb இதைப் பிரதி பண்ணி ஒட்டவும் (Copy and Paste) அவ்வளவுதான் விசியோ 2003 இப்பொழுது விசியோ 2003 சேவைப் பொதி 3 உடன் உள்ளிணைக்கப்பட்டுவிடும். இனி இந்தக் கோப்புறையை இறுவட்டியோ வலையைப்பில் சேமித்து நிறுவினால் நிறுவும் பொழுதே சேவைப் பொதி 3 உடன் நிறுவப்பட்டுவிடும்.