Tuesday, August 9, 2011

யுஎஸ்பி இல் இருந்து நோட்புக்கின் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை நிறுவுதல்.


ல தேவைகளுக்கு அலைந்து திரிவதால் நோட்புக் வாங்கினேன். அதை வாங்கும்போது வெளியில் இணைக்கும் டிவிடி ரைட்டரும் சேர்த்து வாங்கலாம் என்று விற்றவர் கூறினார். என்றாலும் அதை இயங்குதளம் மாத்திரம் நிறுவதற்கு பயன்படுத்த என்னுடைய மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அநாவசியமாக ஒருதடவை மாத்திரமே அல்லது எப்போவாது பயன்படும் ஒரு பொருளை வாங்குவது இடத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் முயற்சி. மாற்றாக நான் ஒரு 8GB பிளாஷ் டிரைவ் வாங்கிக்கொண்டேன். இரண்டும் சேர்ந்து மொத்தமான இலங்கை ரூபாய் 38, 000 செலவழிந்தது (ஏறத்தாழ 350 அமெரிக்க டாலர்). அத்துடன் தரப்பட்ட டிரைவர் இறுவட்டு எக்ஸ்பியின் எல்லா டிரைவர்களையும் உள்ளடக்கவில்லை அவர்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தையே இலக்கு வைத்திருந்தனர் ஆனால் எனக்கு விண்டோஸ் எக்ஸ்பி தேவைப்பட்டது. முதலில் இயங்குதளத்துடன் வேண்டிய மென்பொருட்களைச் சேர்த்துக்கொண்டேன் (பாதுகாப்பு மேம்படுத்தல்கள், அடோபி பிளாஷ் பிளேயர், அடோபி றீடர், பயர்பாக்ஸ் உலாவி, 7-ஜிப்). இது கட்டாயமானதல்ல. இரண்டாவதாக டிவைஸ்டிரைவர் மென்பொருளை விண்டோசுடன் சேர்த்துக்கொண்டேன். இது மிக முக்கியமான ஒன்று இவ்வாறு சேர்க்கும்போது வன்வட்டினை நிறுவும்போதே கண்டுபிடிக்கக்கூடியதாக நிறுவவேண்டும் இதற்கு ஒரே கல்லில் பல மாங்காய்ப் பதிப்பைப் பார்க்கவும். பின்னர் யுஎஸ்பிபூட் என்கிற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். http://hotfile.com/dl/126308550/9d41327/USB_MultiBoot_10.zip.html இந்த இணைப்பு வேலை செய்யவிட்டால் இதே பெயருள்ள கோப்பை இணையத்தில் தேடிப்பார்க்கவும். கோப்பைப் பதிவிறக்கிப் பிரித்தெடுத்தபின்னர் அதில் USB_MultiBoot_10.cmd ஐ இரண்டுதடவை கிளிக் பண்ணவும்.

அதில் h ஐத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் இயங்குதளம் இதை அனுமதிக்காவிட்டால் வின்டோஸ் எக்ஸ்புளோளர் ஊடாக சென்று HPUSBFW.EXE RightClick பண்ணி Run as Administrator என்பதைத் தேர்தெடுக்கவும்

இதன் பின்னர் 1 ஐத் தேர்ந்தெடுத்து விண்டோஸ் எக்ஸ்பி இருக்கும் இடத்தைக் காட்டவும்.

இதன் பின்னர் 2 ஐத் தேர்ந்தெடுத்து யுஎஸ்பி டிரைவ் உரிய இலக்கத்தில் இருக்கிறதா எனப் பார்க்கவும்.

இதன் பின்னர் 3 ஐத் தேர்ந்தெடுத்து பிரதி செய்யவும்.

செயற்பாடு முடிவடைந்த்தும் நோட்புக்கை யுஎஸ்பி ஊடாக இயங்குதளத்தை ஆரம்பிக்க இயலும்.