Sunday, June 6, 2010

ஒரே கல்லில் பல மாங்காய் (Uniformity in Diversity)

ஒரே கல்லில் பல மாங்காய் (Uniformity in Diversity)

தோல்வியில் வெற்றியையும், வெற்றியில் தோல்வியையும் காண்பவன் எவனோ அவனே ஞானி என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமார்த்தா கூறினார். அதுபோன்ற பல்வேறுபட்ட கணினிகளுக்கு ஒரே மாதிரியான நிறுவலை நிறுபனே விவேகி என்று நான் அடித்துச் சொல்வேன். இக்கட்டுரை இதை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி ஆராய்கின்றது.

ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட வன்பொருட்கள் விண்டோசுடன் இணைத்து எழுதப்பட செலுத்தி மென்பொருட்கள் என்றழைக்ப்படும் டிவைஸ்டிரைவர் அந்த இயங்குதளத்திற்காக மாத்திரம் அன்றி அதனுடன் இணைந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் (புறோட்டோக்கோல்) ஐயும் உள்ளடக்கியதாக இருந்தது. எடுத்துக்காட்டாக கணினி வலையமைப்பானது ஈதர்நெட் என்கின்ற வழமையான தொழில்நுட்பத்திற்கு உருவாக்கப்படிருந்தால் கணினியில் உள்ள வலையமைப்பு அட்டையும் (நெட்வேர்க் காட்) அதுடன் ஒத்திசைவானதாக (Compatible) இருக்கவேண்டும். மைக்ரோசாப்ட் இணைத்தவுடனேயே இயங்கும் (Plug and Play) தொழில்நுட்பத்தை விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தியது. இதனால் வன்பொருட்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஒரு சில நிறுவனங்களே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கணினி ஏகாதிபத்திய உலகானது ஆட்டம் காணம் தொடங்கி மக்கள் ஆட்சி மலரத் தொடங்கியது. இது பாகங்களை ஒருங்கிணைது கணினியை உருவாக்குபவர்களின் வேலையை இலகுவாக்கத் தொடங்கியது.

கணினி வன்பொருட்களும் எங்களிடம் அடையள அட்டையிருப்பதைப் போன்றே ஓர் hwid (HardWareID) கொண்டிருக்கின்றது. நாங்கள் செலுத்தி மென்பொருள் (devise driver software) உள்ள இறுவட்டை (CD) கணினியில் உள்நுளைத்து நிறுவலை ஆரம்பிக்கும் போது இவையிரண்டையும் (அதாவது மென்பொருளையும் வன்பொருளையும்) ஒப்பிட்டுபார்த்து சரியென்றவுடனேயே நிறுவலை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறுவி முடிகின்றது. பல்வேறுபட்ட கணினிகளில் (ஏன் ஒரே நிறுவனத்தாரின் பல்வேறு மாதிரிகளிலும் கூட) மாறுபடும் ஒரே விடயம் இந்த hwid தான்.

பொதுவாகத் தாய்ப்பலகை (Motherboard) என்கின்ற கணினியின் அத்தியாவசியமான பாகம் செலுத்தி மென்பொருட்களை ஓர் இறுவட்டில் உள்ளடக்கியே விற்பனை செய்து வந்தனர். பாகங்களை ஒன்று சேர்த்துக் கணினியை உருவாக்குபவர்கள் பல நூற்றுக்கணக்கான இறுவட்டுக்களை ஒவ்வொரு ஒவ்வொரு தாய்ப்பலகைக்குமாகச் சேமித்து வைக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இது சரிவந்தாலும் கூட அளவுக்கதிமாக பல்வேறுபட்ட தாய்பலகைகள் வந்ததால் இவற்றின் அளவும் கட்டுப்படுத்தமுடியாமற் போனது. சிலவேளைகளில் தாய்பலகை செலுத்தி மென்பொருட்களைப் பெறுவதும் கடிமானதாக அமைந்தது. தவிர பல்வேறுபட்ட தாய்பலகைகளில் ஒரே விதமான மென்பொருட்கள் (எடுத்துக்காட்டாக ஒலியெழுப்பும் வன்பொருள், வலையமைப்பு அட்டை) ஒரே மாதிரியானவை அமைந்ததால் தேவையற்ற விதத்தில் பிரதிகள் (Duplicates) காணப்பட்டது. இவை நேரத்தையும் இடத்தையும் வீண்டிப்பதாக அமைந்தது. மேலும் சிலரோ தம்மிடமே வாடிக்கையாளர்கள் மீண்டும் வரவேண்டும் என்கின்ற வியாபரா யுக்தியாகா இந்த வன்பொருட் செலுத்தி மென்பொருளை வாடிக்கையாளருக்கு கொடுக்காமல் விட்டனர்.

நீங்கள் அங்காடி அல்லது சந்தைக்குச் சென்றால் அங்கே மாங்காய்களை ஒன்றாகவே வைத்திருப்பார்கள். பின்னர் அதை அம்பலவி, கறுத்தகொழுந்தான், விலாட் என்று வகைப்படுத்தி வைத்திருப்பார்கள். விழாம்பழத்தை வேறாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒருபோது பழவியாபரிகள் இது சுன்னாகம் சந்தையில் இருந்து வந்ததால் ஒன்றாகவும் (மாம்பழம், விளாம்பழத்தை ஒன்றாகவோ) அல்லது சாவக்சேரி சந்தையில் இருந்து வந்தால் ஒன்றாகவோ வைத்திருக்கமாட்டார்கள். இதே நுட்பத்தில்தான் செலுத்தி மென்பொருட்களும் தேவையான வன்பொருளை இலக்கு வைத்தே உருவாக்கப்படுகின்றது தாய்ப்பலகையை இலக்கு வைத்து அல்ல.

அப்படிப் பார்க்கப்போனால் வணிக நிறுவனங்கள் தயாரிப்பதற்கும் பாகங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் கணினிக்கும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றதா என்றால் எதுவித வித்தியாசமுமே தொழில்நுட்பரீதியாக இல்லை. இவையெல்லாம் வெறும் வியாபார யுக்திகள் தான்.

வன்பொருட் செலுத்தியை விண்டோஸ் இயங்குதளத்தோடு இணைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தானியங்கி நிறுவலகள் விண்டோசில் வன்பொருட்களை தானே கண்டறிந்து நிறுவுவதால் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தாலாம். செலுத்தி மென்பொருளைக் கொண்டுவரமறந்து விட்டோம் என்று கவலைப்படவேண்டியதில்லை. அத்துடன் நீங்கள் அலுவலகத்தில் இருந்து நேரத்திற்கு வீட்டிற்குப் போகலாம் :)

செலுத்தி மென்பொருட்களின் இறுவட்டிக்களை நூற்றுக் கணக்கில் கட்டிக் காவிக்கொன்டு திரியவேண்டியதில்லை. தவிர பல இடங்களின் வன்பொருள் செலுத்தி இறுவட்டைத் தொலைத்தும் இருப்பார்கள். இதைப் பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை.

இதுதவிர தனியாகவும் வன்பொருளுக்கான செலுத்தி மென்பொருளை நிறுவ இயலும் என்றாலும் இதற்கு இயங்குதளத்தை நிறுவி மென்பொருளை நிறுவுவதற்கான நேரத்தை விட கூடுதலான நேரத்தை எடுப்பதை அவதானித்துள்ளேன்.

இந்தத் தொடரில் நாம் விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருளுடன் செலுத்தி மென்பொருளைச் சேர்பது பற்றிப்பார்பபோம். உண்மையில் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 கூட இவ்வகையில் செய்யக்கூடியவைதான்.

முதலில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை கணினியில் பிரதி செய்துகொள்ளவும்.

Driverpacks.net தளத்திற்கு வேண்டிய சரியான இயங்குதளத்திற்குகான செலுத்தி மென்பொருட்களைப் பதிவிறக்கிக் கொள்ளவும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பியிற்கு http://driverpacks.net/driverpacks/latest பக்கத்தின் இறுதியில் பார்க்கவும். அத்துடன் சேர்த்து செலுத்தி மென்பொருட்களை இயங்குதளத்துடன் சேர்க்கும் DPbase மென்பொருளை http://driverpacks.net/applications/latest இருந்து பதிவிறக்கிக் கொள்ளவும். நீங்கள் பதிவிறக்கிய DPs_BASE_8125.exedouble click பண்ணவும் இப்போது அது பலகோப்புறைகளை உருவாக்கிக்கொள்ளும் இதற்குள் நீங்கள் பதிவிறக்கிய செலுத்தி மென்பொருட்களை DriverPacks கோப்புறைக்குள் போட்டுவிடவும்

இப்போது முதலில் விண்டோஸ் இருக்கும் இடத்தைக் காட்டிவிடவும் (இரண்டாவது படம்).

இரண்டாவதாக Driverpacks சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்கவும். உங்களிடம் சாட்ட ரக (sata) வன்வட்டு (ஹாட்டிஸ்க்) இருந்தால் Driverpacks storage for text mode எனபதையும் மற்றக்காமல் தேர்ந்தெடுக்கவும்.

மூன்றாவதாக driverpacks வழிமுறையில் வகை2 (Method 2) ஐயே வைத்திருக்கவும். இந்தமுறையே பிரச்சினை இன்றி வேலைசெய்கின்றது வகை ஒன்று (Method 1) அநேகமாகச் சரிவர வேலை செய்யாது.

நான்காவதாக முடிவடையும் முறையை GUIRunOnce ஐயே வைத்திருக்கவும் மாற்றவேண்டாம்.

எல்லாச் செலுத்தி மென்பொருட்களும் பிந்தயவையா என்பதைச் சோதித்திப் பார்பதற்கு UpdateChecker ஐச் சரிபார்த்துக் கொள்ளவும்.

இறுதியாக Slipstream ஐக் கிளிக் பண்ணவும். அவ்வளவுதான் ஒரு சில நிமிடங்களிலேயே இயங்குதளத்துடன் செயலி மென்பொருள் ஒருங்கிணைக்கப்படிருக்கும் இதை எந்தக் கணினியில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்கலாம். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துவிட்டோம் இல்லையா?

Saturday, June 5, 2010

பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாக்குதல் (Computer Assembling)

பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாக்குதல் (Computer Assembling)

பாகங்களை ஒருங்கிணைத்து கணினியை உருவாக்குவது என்பது ஒரு சுவையான அனுபவம். நான் முதன் முதலில் இந்தியாவில் பெங்ளூரில் பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாகியது 2000 ம் ஆண்டு டிசெம்பர் காலப்பகுதியில். அப்போதே டாம்ஸ்ஹாட்வெயார்.காம் இணையத்தளத்தில் இருந்து தேவையான தகவல்களைச் சேகரித்து எனது பல்கலைக்கழக சீனியர்கள் இருவருடன் சேர்ந்து எனது முதலாவது பாகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிக் கொண்டேன். இதில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் பல. ஒவ்வொரு பாகமும் எப்படி வேலைசெய்கின்றது என்பதை அக்குவேறு ஆணிவேறாக ஆழமாகக் கற்க உதவியது. என்னுடைய தாழ்மையான கருத்துப்படி ஒருவர் பலவருடமாகக் கற்றும் கணினியை ஒருங்கிணைக்கமுடியவில்லை என்றதால் அவர் கற்றதில் அவருக்கே நம்பிக்கையில்லை என்றுதான் அர்த்தம்

இதனால் கிடைக்கும் நன்மைகள்

ஒவ்வொரு முறையும் கணினியைப் பாவிக்கும் போது என்னுடைய முயற்சி என்று தன்னபிக்கையை ஊட்டியவண்ணமே இருக்கும். இது விலைகொடுத்து வாங்கும் கணினிகளில் கிடைக்காது. தன்னபிக்கை இல்லாதவர்களும் தாம் கற்றதிலேயே சந்தேகப்படுவர்களுமே வணிக நிறுவனங்களின் கணினிகளை வாங்குவார்கள். எச்பியோ ஐபிஎம் ஓ ஒன்றும் செயலிகளையோ (புறோசசரை) அல்லது வன்வடுக்களையோ (ஹாட்டிஸ்க்) உருவாக்குவதில்லை அவர்களும் இன்டெலினுடையதோ அல்லது ஏஎம்டியினுடைய் செயலிகளை வாங்கித்தான் பொருத்திக் கொள்ளுகிறார்கள். இவர்களாலேயே ஏதோ செய்யமுடியும் என்றால் உங்களால் அதற்கு மேலும் செய்யமுடியும்.

விரும்பியவாறு கணினியை எமது தேவைக் கேற்ப உருவாக்கிக் கொள்ளலாம். பொதுவாக வணிக நிறுவனங்கள் உருவாக்கும் கணினிகள் பொதுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. அநேகமான வணிக நிறுவனங்களின் கணினிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வன்வட்டினை இணைக்கவியலாது (இதற்கான இடவசதியிருக்காது அல்லது சிலசமயங்களில் போட்டும் - Port உம் இருக்காது). தேவையான பாகங்கள் சரியாக இல்லாமலும் எடுத்துக்காட்டாக டீவிடி ரைட்டர் இல்லாமலோ (டீவிடி போடமுடியாத கணினிகளைக் கூடக் கண்டிருக்கின்றேன்) அல்லது தேவையற்ற பாகங்கள் இணைக்கப்பட்டோ எடுத்துக்காட்டக புளாப்பி டிரைவ் காணப்படும். தவிர கணினி ஒரே டிரைவ்வாக போமட் (format) பண்ணப்பட்டிருக்கும் இதை பல்வேறு பாகங்களாகப் பிரிப்பது கடினமாக சந்தர்பங்களும் உண்டு. வன்வட்டின் அளவு காணாமலோ இருக்கலாம். அண்மையில் வவுனியாவில் 2 டெராபைட் அளவுள்ள வன்வட்டுள்ள கணினியை வெற்றிகரமாக பாகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்கியிருந்தேன். இது நான் மாத்திரம் அல்ல நீங்களும் செய்யக் கூடிய ஒன்றுதான்.

சரியான பாகங்களைத் தேர்ந்தெடுத்து நீண்ட நாட்கள் பணிபுரியமாறு செய்யவைக்கலாம். எடுத்துக்காட்டாக நான் கண்ட வணிகக் கணினி ஒன்றில் வன்வட்டானது அளவுக்கதிமாக இறுக்காமாக இணைப்பட்டுருந்தது. இதனால் வன்வட்டில் ஆயுட்காலம் குறைவடையும் இதனால் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் புதிய வன்வட்டினை விற்றுத்தீர்த்து இலாபமீட்டுக் கொள்வார்கள். மேலும் வணிக நிறுவனங்கள் தேவையில்லாத மென்பொருட்களைப் போட்டுக் கணியைக் குப்பையாக்கி வைத்திருப்பார்கள்.

பணத்தைச் சேமிக்கலாம். வணிக நிறுவனங்கள் தேவையில்லாத பாகங்களைப் போட்டு சொதப்பி வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டக புளாப்பிடிரைவ் - இது எந்த வாடிக்கையாளருக்காவது இக்காலத்தில் தேவையா? இதைவிட புளாப்பி டிரைவ் இல்லாமலே கணினியை உருவாக்கிவிடலாம். நீங்கள் நூதசாலையில் பணிபுரிந்தால் மாத்திரமே இக்காலத்தில் புளாப்பி டிரைகளைக் காணமுடியும் இவ்வாறான வழக்கொழிந்தவற்றையெல்லாம் வாடிக்கையாளரிடம் காட்டி எரிச்சலூட்டுவதைவிட நீங்களே ஒரு சிறந்த கணினியை உருவாக்கிவிடாம். தவிர இவர்களின் கணினியில் ஒட்டியிருக்கும் விண்டோசின் தொடரிலக்க்மும் (அதாங்க சீரியல் நம்பர்) கணினியில் நிறுவப்பட்டிருக்கும் விண்டோஸின் தொடரிலக்கும் அநேகமாக வேறாகவே இருக்கும்.

வினைத்திறனான கணினியை உருவாக்கலாம். அநேகமான வணிகநிறுவனங்கள் ஏதே கிடைப்பதைக் கொண்டி கணினியை உருவாக்கி வாடிக்கையாளரின் தலையில் தள்ளிவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்குமேல் கட்டுக்கதையையும் கட்டிவிடுவார்கள் எடுத்துக்காட்டாக வவுனியா பிசிஹவுசில் சென்றவாரம் சென்றபோது இண்டெல் அட்டம் புரோசசரில் கணினி விளையாட்டுக்கள் விளையாடமுடியாது என்று கூறினார்கள் நான் பரீட்சித்துப் பார்த்ததில் சரிவர வேலைசெய்தது.

செயன்முறை


இந்தவாரம் வவுனியாவில் நானும் ஜெயமுகனும் சேர்ந்து உருவாக்கியிருந்தோம். இது மிக எளிமையான செயற்பாடு என்பதால் அதன் வழிமுறையைக் கீழே தருகின்றேன்.

முதலில் மதர்போட்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போல கணினியின் தாயாக தாய்பலகை என்று பொருள்படும் மதர்போட்டே இருக்கின்றது. நாங்கள் எடுத்துக்கொண்ட இண்டெல் ஆட்டம் மதர்போட் செயலியையும் அதனுடன் இணைந்த சிறிய செயலியைக் குளிர்ச்சிப்படுத்தும் சிறிய மின்விசிறியும் இணைக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு அதிகமான வேலை இருக்கவில்லை. இதைக் கொழும்பில் இலங்கை ரூபா 7, 850 (ஏழத்தாழ 75 அமெரிக்க டாலர்கள்) இற்கு வாங்கியிருந்தோம் தவிர 1ஜிகாபைட் டீடீஆர் 2 நினைவகம் (ராம்) இலங்கை ரூபா 3, 350 (ஏழத்தாழ 30 அமெரிக்க டாலர்கள்) இற்கு வாங்கியிருதோம். கேசிங் இலங்கை ரூபா 2, 600 (ஏழத்தாழ 24 அமெரிக்க டாலர்கள்) இற்கு வவுனியாவில் வாங்கினோம் ஏலவே இருந்த வன்வட்டையும், மொனிட்டரையும் விசைபல்கையும்(கீபோட்) சுட்டி (மவுஸ்) ஐயும் பாவித்தே உருவாக்கினோம். அவ்வளவுதான் சுமார் 2 மணிநேரத்துக்குள்ளாகவே எல்லாம் முடிந்து கணினியும் ஆரம்பித்து சரிவர இயங்க ஆரம்பித்து விட்டது.