Sunday, June 7, 2009

அழைத்து இணையும் (Dialup) இணைப்பை உருவாக்குதல்

அழைத்து இணையும் (dialup) இணைப்பே மிகவும் அதிகமாகப் பயன்படும் இணைய இணைப்பாகும். இதில் மெதுவான சாதாரண தொலைபேசி இணைப்பில் இருந்து அநேகமான அகலப்பட்டை (Broadband) இணைப்பு வரை பயன்படுகின்றது.

இம்முறையை விண்டோஸ் 2000/விண்டோஸ் எக்ஸ்பி/விண்டோஸ் சர்வர் 2003 இல் உருவாக்கும் வழிமுறையைப் பார்ப்போம். சில மோடங்களை நிறுவும் போது தாமாகவே அழைத்து இணையும் இணைப்பை உருவாக்கும் என்பதைக் கவனிக்கவும் எனவே ஏற்கனவே அழைத்து இணையும் இணைப்பை உருவாக்காவிட்டால் மட்டுமே தொடர்ந்து செல்லவும்.

Start -> Run -> ncpa.cpl என்றவாறு தட்டச்சுச் செய்யவும். தட்டச்சுச் செயவது கடினம் என்றால் Start-> Control Pannel -> Network Connection (அல்லது Network and Internet connection -> Network Connection) . இப்போது தோன்றும் விண்டோவின் இடதுபக்க மேல் மூலையில் உள்ள create a new connection என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து வரும் "இணைப்பை ஒழுங்கமைக்க உங்களை வரவேற்கின்றோம்" என்றவாறு ஆங்கிலத்தில் பொருள்படும் Welcome to New Connection wizard ஐத் தொடரவும்.

next ஐ அழுத்தித் தொடரவும். அதில் connect to the internet என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இலங்கையில் அழைத்து இணையும் அகலப்பட்டை (எடுத்துக்காட்டாக டயலாக்) போன்ற இணைப்புக்களிற்கு "Connect using a broadband connection that requires a username and password" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து வரும் விண்டோவில் இணைய சேவை வழங்குனரின் பெயர். இதில் நீங்கள் விரும்பிய பெயரைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக உங்களின் பெயர். இது ஒரு முக்கியமான விடயமல்ல ஆதலினால் தொடர்ந்து செல்லவும்.

அடுத்துவரும் விண்டோவில் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் எழுத்துப் பிழைகள் இன்றித் தட்டச்சுச் செய்யவும். அவ்வளவுதான் இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.

Thursday, June 4, 2009

ஆரம்பிக்கும் (bootable) இறுவட்டை (CD) உருவாக்குதல்

பல சமயங்களில் விண்டோஸ் இறுவட்டைக் கொண்டு நிறுவவேண்டிய சந்தர்பங்கள் உண்டு. பொதுவாகக் கிடைத்த இறுவட்டு காலத்தாற் பிந்தையதாக இருக்கும். இதைமேம்படுத்தி விட்டு நிறுவலை மேற்கொள்ளலாம். இதற்கு என்லைட் போன்ற மென்பொருட்கள் இலகுவானவை. இதை வரும் தொடரில் பார்ப்போம். இப்போதைக்கு நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி/2000/2003 இயங்குதளத்தை வன்வட்டில் (Harddisk) இல் பிரதி பண்ணியிருப்பதாக் கொள்வோம். இப்போது மீண்டும் இறுவட்டை உருவாக்குவதற்கு இரண்டு பிரதான வழிமுறைகள் உண்டு ஒன்று என்லைட் மற்றையது நீறோ என்கின்ற இறுவட்டை உருவாக்கப் பயன்படுத்தப் படும் மென்பொருள்.

என்லைட் வழிமுறை

என்லைட் இயங்குவதற்கு டாட்.நெட் 2.0 சட்டம் (டாட்.நெட் 2.0 பதிவிறக்கம்)
என்லைட்டைப் பதிவிறக்கவும் (என்லைட் பதிவிறக்கம்)

முதலில் மைக்ரோசாப்ட்.நெட் ஐயும் அதைத் தொடர்ந்து என்லைட் மென்பொருளையும் நிறுவிக் கொள்ளவும். என்லைட்டை டாட்.நெட் இல்லாமல் நிறுவமுயன்றால் டாட்.நெட் சட்டம் இல்லை என்று பிழைச் செய்தி வரும். முதலில் என்லைட்டை ஆரம்பிக்கவும். (Start->All Programs->nLite) next ஐத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் எங்கே விண்டோஸ் இயங்குதளத்தைப் பிரதிபண்ணினீர்களோ அந்த இடத்தைக் காட்டவும். (வன்வட்டில் ஆகக்குறைந்தது 800 மெகாபைட் இடவசதியில்லையென்றையால் ஓர் பிழைச் செய்திகாட்டும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செல்லவும்). மீண்டும் next ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கடைசியாகவுள்ள Create Bootable ISO என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் next ஐத் தேர்ந்தெடுக்கவும் அதில் Mode ஐத் தேர்ந்தெடுக்கவும். Burn Speed இல் ஆகக்குறைந்த வேகத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான் bootable CD இப்போது உருவாகியிருக்கும்.

நீறோ வழிமுறை
நீறோ ஓரளவு பிரபலமான மென்பொருள் என்பதால் இன்னொரு வழிமுறையும் உண்டு. இதற்கு எக்ஸ்பிரஸ் பதிப்பினைப் பயன்படுத்தமுடியாது முழுப்பதிப்பு அவசியம். கீழ்வரும் வழிமுறை இதன் 6 ஆம் பதிப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பதிப்புக்களிற்கு வேண்டிய மாறுதல்களைச் செய்யவும்.

நீறோ ஐ ஆரம்பிக்கவும் (எடுத்துக்காட்டாக Start->All Programs-> Nero 6 Ulta Edition -> Nero Burning ROM)
CDROM (boot) அல்லது DVD-ROM (boot) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
boot (tab) இல் உள்ள image file ஐ என்லைட் நிறுவலில் இருந்து பெற்றுக் கொள்ளவும் (தேடும் பொழுது allfiles என்பதைத் தேர்ந்தெடுக்கவும்).
Enable Expert settings இல் kind of emulation - No emulation, Number of loaded sectors 4 என்றவாறு மாற்றியமைக்கவும்.

அவ்வளவுதான் இப்போது வேண்டிய கோப்புக்களைச் சேர்த்துவிட்டுப் புதிய விண்டோஸ் நிறுவல் இறுவட்டு ஒன்றைத் தயார் செய்துவிடலாம்.

Tuesday, April 28, 2009

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007  சேவைப் பொதி 2 உலகளாவிய ரீதியாக 28 ஏப்ரல் 2009 முதல் பதிவிறக்கக் கிடைக்கின்றது. உங்கள் கணினியில் ஏற்கனவே ஆபிஸ் 2007 இருந்தால் நிறுவிக் கொள்ளலாம் இல்லையென்றால் புதிதாக நிறுவ விரும்பினால் கீழ்க்கண்ட வழிமுறையைப் பின்பற்றவும் ஏனென்றால் இவ்வழிமுறைமூலம் மீண்டும் மீண்டும் சேவைப் பொதியினை நிறுவது அவசியமற்றது இதன் மூலம் நேரத்தை மீச்சப்படுத்திக் கொள்ளுவதுடன் நிறுவும் பொழுதே கணினியைப் பாதுகாப்பான மென்பொருளாக நிறுவிக் கொள்ளலாம். 
  1. முதலில் உங்கள் இறுவட்டில்(CD) இருந்து கணினிக்கு ஆபிஸ் 2007 மென்பொருளைப் பிரதியெடுத்துக் (copy) கொள்ளவும். 
  2. இரண்டாவதாக ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2 ஐப் பதிவிறக்கிக் கொள்ளவும். 
  3. அதிலுள்ள கோப்புக்களை வேறாக்க ஏற்கனவே பதிவிறக்கிய கோப்பினை தட்டச்சுச் செய்வதற்கு இலகுவாக மீளப்பெயரிடவும் (எடுத்துக்காட்டாக office2007sp2-uma.exe)
  4. பின்னர் அந்தக்கோப்புறையில் (Folder) இருந்தவண்ணம் கட்டளையைவிளிபூட்டை இயக்கவும் (Command prompt).  நீங்கள் இதை start->Run->Cmd என்றவாறு வந்து இந்தக் கோப்புறையிற்கு வரவேண்டி ஏற்ப்படலாம். 
  5. இப்போது office2007sp2-uma.exe /extract (நீங்கள் வேறுபெயர் கொடுத்திருந்தால் அந்தப் பெயரால் மாற்றிவிடவும்) என்று கட்டளையைத் தட்டச்சுச் செய்யவும். குறிப்பு: 7-ஜிப் மென்பொருள் சரியாகக் கோப்புகளைப் பிரித்தெடுக்கவில்லை. வேறேதேனும் கோப்புக்களைப் பிரித்தெடுக்கும் பிரயோகங்கள் இருந்து வேலை செய்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும் பின்னர் இப்பதிவினை மேம்படுத்திக் கொள்கின்றேன். இப்போதைக்கு கட்டளைகளூடாக இதைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்ளலாம். 
  6. மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ளவும். மேலேயுள்ள படத்தைப் பார்க்கவும். 
  7. எங்கே பிரித்தெடுத்த கோப்புக்களை வைக்கப் போகின்றீர்கள் என்பதைத் தெரியப்படுத்தவும்.  எடுத்துக்காட்டாக D:\2007SP2
  8. இப்போது நீங்கள் பிரித்தெடுத்த கோப்புக்களை ஆபிஸ் 2007ப் பிரதிசெய்த கோப்புறைக்குள் Update என்ற கோப்புறைக்குள் பிரதிபண்ணவேண்டும். முக்கிய குறிப்பு: இதில் ஏற்கனவே கோப்புக்கள் இருந்தால் அழித்துவிட்டு பின்னர் பிரித்தெடுத்த சேவைப் பொதி 2 கோப்புக்களை போடவும்.
  9. இப்போது மீண்டும் உங்கள் வலையமைப்பூடாகவோ அல்லது டீவிடியிலே இதைப் பிரதிபண்ணிக் கொள்ளவும். அவ்வளவுதான் இனி கணினியில் ஆபிஸ் 2007 நிறுவும் பொழுது ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2 உடன் நிறுவப்பட்டுவிடும். 

Monday, April 20, 2009

சைமண்ட்டெக் ஆண்டிவைரஸ் நிறுவும் பொழுதே தற்போதைய வைரஸ் அகராதியுடன் நிறுவுதல்

சைமண்டெக் ஆண்டிவைரஸ் காப்பரேட் எடிசனில் ஒரு சிறப்பு என்னவென்றால் நிறுவும்பொழுதே அதன் இற்றைப்படுத்தப்பட்ட வைரஸ் அகராதியுடன் (upto date Antivirus definitions) நிறுவக் கூடியதாக இருப்பதாகும். இதற்கான வழிமுறையை இந்த வலைப்பதிவில் பார்ப்போம். இக்கட்டுரை சைமண்டெக் காப்பரேட் பதிப்பு 10.2 உடன் சோதித்துச் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்திய பின்னரே இவ்வலைப்பதிவைப் பதிந்துள்ளேன். வேறேதும் சைமண்டெக் பதிப்பில் பிரச்சினை இருந்தால் தயவு செய்து தயங்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

  1. சைமண்டெக்கின் மேம்படுத்தப்பட்ட வைரஸ் கோப்பு அகராதி மேம்படுத்தலைப் பதிவிறக்கிக் கொள்ளவும்.
  2. மேலேயுள்ள சைமண்டெக் பக்கதில் உள்ள i32.exe அல்லது x86.exe என்று முடிவடையும் கோப்பினைப் பதிவிறக்கிக் கொள்ளவும் (2ஆவதாக அல்லது 3ஆவதாக இருக்கும் இணைப்பு)
  3. மேலே பதிவிறக்கிய கோப்பினை 7-ஜிப் அல்லது வேறேதேனும் கோப்பினைப் பிரிக்கும் (எடுத்துக்காட்டாக வின்ரார், வின்ஜிப்) கோப்புப் பிரயோகத்தினைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும். அதில் உள்ள VIRSCAN.ZIP என்ற கோப்புத்தான் தேவையானது இதை VDEFHUB.ZIP என்றவாறு பெயர் மாற்றிக் கொள்ளவும்.
  4. மேலேயுள்ள கோப்பைகொண்டு இறுவட்டில் (CDROM) இலிருந்து பிரதிசெய்த SAV கோப்புறைக்குள் (Folder) உள்ள VDEFHUB.ZIP கோப்பை மாற்றீடு (replace) செய்யவும். பின்னர் இதை மீளவும் இறுவட்டாக ஆக்கிக் கொள்ளவும். பின்னர் கணினியில் நீங்கள் சைமண்டெக் காப்பரேட் எடிசனை நிறுவும் பொழுது புது வைரஸ் அகராதியுடன் நிறுவப்பட்டு விடும்.

Tuesday, April 14, 2009

கணினியில் விண்டோஸ் நிறுவப்பட்ட தேதியை அறிய

கணினியில் விண்டோஸ் நிறுவப்பட்ட தேதியை சிலசமயங்களின் கட்டாயமாக அறியவேண்டியுள்ளது. இதற்கு மைக்ரோசாப்ட்டினால் வளங்கபட்ட கட்டளை விழிப்பூட்டுகளுள் ஒன்றான systeminfo கட்டளையைப் பாவிக்கலாம். (Start -> cmd -> systeminfo) . மேலும் இக்கட்டளையூடாக கணினியின் தாய்ப்பலகை (மதர்போர்டு) போன்ற விபரங்களையும் அறிந்துகொள்ளலாம். இது தவிர SIW என்றழைக்கப்படுகின்றது சிஸ்டம் இன்போ பொ விண்டோஸ் என்கின்ற யுட்டிலிட்டி பெரும்பாலான மதர்போர்டுகளை சரிவர இனங்காணுகின்றது. இதனால் டிரைவர்களைத் தேடுவதற்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். இதை மீண்டும் பாவிக்கவிரும்பும் கோப்பாக பெறவிரும்பவர்கள் > என்கின்ற மீள்வழிகாட்டியைப் பயனபடுத்தலாம். எடுத்தக்காட்டாக systeminfo > systeminfo.txt என்னும் கட்டளையானது systeminfo.txt ஐ உருவாக்கிக் கொள்ளும். மாதிரி வெளியீடு கீழே தந்துள்ளேன்.

Host Name: RAJARAJAN
OS Name: Microsoft Windows XP Professional
OS Version: 5.1.2600 Service Pack 3 Build 2600
OS Manufacturer: Microsoft Corporation
OS Configuration: Standalone Workstation
OS Build Type: Uniprocessor Free
Registered Owner: Rajaraja Cholan
Registered Organization: Chola Dynasty
Product ID: 55274-640-1422534-23893
Original Install Date: 1/29/2009, 10:38:21 AM
System Up Time: 0 Days, 1 Hours, 16 Minutes, 20 Seconds
System Manufacturer: Kobian
System Model: PVM4
System type: X86-based PC
Processor(s): 1 Processor(s) Installed.
[01]: x86 Family 15 Model 4 Stepping 1 GenuineIntel ~2133 Mhz
BIOS Version: A M I - 12000528
Windows Directory: C:\WINDOWS
System Directory: C:\WINDOWS\system32
Boot Device: \Device\HarddiskVolume1
System Locale: en-gb;English (United Kingdom)
Input Locale: en-us;English (United States)
Time Zone: (GMT+05:30) Sri Jayawardenepura
Total Physical Memory: 1,983 MB
Available Physical Memory: 1,429 MB
Virtual Memory: Max Size: 2,048 MB
Virtual Memory: Available: 2,008 MB
Virtual Memory: In Use: 40 MB
Page File Location(s): C:\pagefile.sys
Domain: CHOLADYNASTY
Logon Server: \\RAJARAJAN
Hotfix(s): 16 Hotfix(s) Installed.
[01]: File 1
[02]: File 1
[03]: Q147222
[04]: KB917283 - Update
[05]: KB922770 - Update
[06]: IDNMitigationAPIs - Update
[07]: NLSDownlevelMapping - Update
[08]: KB928788
[09]: KB929399
[10]: KB929773
[11]: KB932390
[12]: KB933547
[13]: KB931756
[14]: MSCompPackV1 - Update
[15]: KB926239 - Update
[16]: KB955839 - Update
NetWork Card(s): 1 NIC(s) Installed.
[01]: VIA Rhine II Fast Ethernet Adapter
Connection Name: Local Area Connection
DHCP Enabled: Yes
DHCP Server: 192.168.1.1
IP address(es)
[01]: 192.168.1.2

Tuesday, January 27, 2009

ஸ்கைப்

இணையமூடாக ஒலியழைப்புக்களை மேற்கொள்வதில் மிகவும் பிரபலாமான மென்பொருள் ஸ்கைப். இதில் காவிச் செல்லகூடிய செல்ஸ்கைப் உம் வெளிவந்துள்ளது. இது ஆரம்பத்தில் ஜான் டீ ஹாலரின் கைவண்ணத்தில் உருவாகியது. இந்தப் பதிப்பை நேரடியாகப் பதிவிறக்கும் வசதி இன்னமும் அதிகாரப் பூர்வமாகக் கிடையாது. மேலும் இதன் 4ஆவது பதிப்பின் 3ஆவது பீட்டாப் பதிப்பு இணையத்தளத்தில் கிடைத்தாலும் அது செல்பதிப்பில் இன்னமும் நான் காணவில்லை. ஆகவே இவ்விரண்டு பதிப்புக்களையும் இணையத்தில் மேலேற்றியுள்ளேன் தேவையானவர்கள் பதிவிறக்கம் செய்து பாவிக்கவும். இதற்கு நிர்வாக அணுக்கம் தேவையில்லை.
  1. செல்ஸ்கைப் 3.8ஆம் பதிப்பு
  2. செல்ஸ்கைப் 4 இன் 3ஆவது பீட்டாப் பதிப்பு.
பதிவிறக்கியதும் இரண்டுதடவை கிளிக் செய்து பிரித்தெடுக்கவும். பின்னர் போட்டபிள் ஸ்கைப் ஐகானை இரண்டுதடவை கிளிக் செய்வதன் மூலம் ஆரம்பிக்கலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்கைப் ஐ ஆரம்பிக்க விரும்புபவர்கள் ஸ்கைப் நிறுவப்பட்டிருந்தால் C:\Program Files\Skype\Phone கோப்புறைக்குச் சென்று Skype.exe அல்லது நீங்கள் மேலேயுள்ளதை நீங்கள் பதிவிறக்கிக் பாவித்தால் PortableSkype இற்கே நீங்கள் குறுக்குவழி (Shortcut) உருவாக்குங்கள். பின்னர் குறுக்குவழியின் குணாதியங்களைத் (Properties) தேர்ந்தெடுத்து குறுக்குவழி தத்தலில் (Tab) இல் PortableSkype.exe" /secondary (இதில் /secondary என்பதைத் தட்டச்சுச் செய்யவும்) அவ்வளவுதான் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்கைப்பை ஒரே நேரத்தில் பாவிக்கலாம்.

Thursday, January 15, 2009

விசியோ 2003 உடன் சேவைப் பொதி் 3 ஐச் சேர்க்கும் முறை

நான் விரும்பும் மென்பொருட்களில் ஒன்று மைக்ரோசாப்ட் விசியோ. இதில் இலகுவாக வலையமைப்பு வரைபடங்களை வரையலாம். இதன் 2003 பதிப்பில் சேவைப் பொதியினை சேர்க்கும் வழிமுறைகளை இந்த வலைப் பதிவில் பார்ப்போம். விசியோ 2003 சேவைப் பொதி 3 இப்போதைக்கு மிகப் பிந்தைய சேவைப் பொதி. இதை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் வைத்திருக்கும் விசியோஐ முதலில் Start -> Run ->"E:\SETUP.EXE" /a (இங்கு E: என்பது இறுவட்டு இயக்கியாகும். விசியோவை உங்கள் கணினியில் பிரதிசெய்திருந்தால் E: ஐ உரிய வழியைக் காட்டிவிடவும் எடுத்துக் காட்டாக "E:\Software\Office\Microsoft Visio 2003 Professional Edition\SETUP.EXE" /a) இங்கு a என்பது நிர்வாக என்பதன் ஆங்கிலச் சொல்லான Adminitrative இல் இருந்து வந்ததாகும். இப்போது எங்கே பிரதிபண்ணுவது
என்று கேட்கும். இடத்தைக் காட்டிவிட்டதும் பிரதி பண்ணும். இந்த எடுத்துக்காட்டில் நீங்கள் K:\Visio2003 நீங்கள் சேமித்தாக எடுத்துக் கொள்கின்றேன்.

பின்னர் நீங்கள் பதிவிறக்கம் செய்த விசியோ சேவைப் பொதி மூன்றைப் பிரித்தெடுக்கவும் இதற்கு 7-ஜிப், வின்சிப், வின்ரார் போன்ற மென்பொருட்கள் உதவலாம். இதை நீங்கள் விரும்பிய கோப்புறையின் பெயரில் சேமிக்கவும் இந்த எடுத்துக் காட்டில் நீங்கள் K:\Visio2003SP3 இல் சேமித்தாக எடுத்துக் கொள்கின்றேன். இப்பொழுது மீண்டும் command prompt இல் சென்று (Start -> Run)
msiexec /p K:\Visio2003SP3\VISIOSP3.msp /a K:\Visio2003\VISPRO.MSI shortfilenames=true /qb இதைப் பிரதி பண்ணி ஒட்டவும் (Copy and Paste) அவ்வளவுதான் விசியோ 2003 இப்பொழுது விசியோ 2003 சேவைப் பொதி 3 உடன் உள்ளிணைக்கப்பட்டுவிடும். இனி இந்தக் கோப்புறையை இறுவட்டியோ வலையைப்பில் சேமித்து நிறுவினால் நிறுவும் பொழுதே சேவைப் பொதி 3 உடன் நிறுவப்பட்டுவிடும்.