Sunday, June 7, 2009

அழைத்து இணையும் (Dialup) இணைப்பை உருவாக்குதல்

அழைத்து இணையும் (dialup) இணைப்பே மிகவும் அதிகமாகப் பயன்படும் இணைய இணைப்பாகும். இதில் மெதுவான சாதாரண தொலைபேசி இணைப்பில் இருந்து அநேகமான அகலப்பட்டை (Broadband) இணைப்பு வரை பயன்படுகின்றது.

இம்முறையை விண்டோஸ் 2000/விண்டோஸ் எக்ஸ்பி/விண்டோஸ் சர்வர் 2003 இல் உருவாக்கும் வழிமுறையைப் பார்ப்போம். சில மோடங்களை நிறுவும் போது தாமாகவே அழைத்து இணையும் இணைப்பை உருவாக்கும் என்பதைக் கவனிக்கவும் எனவே ஏற்கனவே அழைத்து இணையும் இணைப்பை உருவாக்காவிட்டால் மட்டுமே தொடர்ந்து செல்லவும்.

Start -> Run -> ncpa.cpl என்றவாறு தட்டச்சுச் செய்யவும். தட்டச்சுச் செயவது கடினம் என்றால் Start-> Control Pannel -> Network Connection (அல்லது Network and Internet connection -> Network Connection) . இப்போது தோன்றும் விண்டோவின் இடதுபக்க மேல் மூலையில் உள்ள create a new connection என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து வரும் "இணைப்பை ஒழுங்கமைக்க உங்களை வரவேற்கின்றோம்" என்றவாறு ஆங்கிலத்தில் பொருள்படும் Welcome to New Connection wizard ஐத் தொடரவும்.

next ஐ அழுத்தித் தொடரவும். அதில் connect to the internet என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இலங்கையில் அழைத்து இணையும் அகலப்பட்டை (எடுத்துக்காட்டாக டயலாக்) போன்ற இணைப்புக்களிற்கு "Connect using a broadband connection that requires a username and password" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து வரும் விண்டோவில் இணைய சேவை வழங்குனரின் பெயர். இதில் நீங்கள் விரும்பிய பெயரைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக உங்களின் பெயர். இது ஒரு முக்கியமான விடயமல்ல ஆதலினால் தொடர்ந்து செல்லவும்.

அடுத்துவரும் விண்டோவில் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் எழுத்துப் பிழைகள் இன்றித் தட்டச்சுச் செய்யவும். அவ்வளவுதான் இணைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.

Thursday, June 4, 2009

ஆரம்பிக்கும் (bootable) இறுவட்டை (CD) உருவாக்குதல்

பல சமயங்களில் விண்டோஸ் இறுவட்டைக் கொண்டு நிறுவவேண்டிய சந்தர்பங்கள் உண்டு. பொதுவாகக் கிடைத்த இறுவட்டு காலத்தாற் பிந்தையதாக இருக்கும். இதைமேம்படுத்தி விட்டு நிறுவலை மேற்கொள்ளலாம். இதற்கு என்லைட் போன்ற மென்பொருட்கள் இலகுவானவை. இதை வரும் தொடரில் பார்ப்போம். இப்போதைக்கு நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி/2000/2003 இயங்குதளத்தை வன்வட்டில் (Harddisk) இல் பிரதி பண்ணியிருப்பதாக் கொள்வோம். இப்போது மீண்டும் இறுவட்டை உருவாக்குவதற்கு இரண்டு பிரதான வழிமுறைகள் உண்டு ஒன்று என்லைட் மற்றையது நீறோ என்கின்ற இறுவட்டை உருவாக்கப் பயன்படுத்தப் படும் மென்பொருள்.

என்லைட் வழிமுறை

என்லைட் இயங்குவதற்கு டாட்.நெட் 2.0 சட்டம் (டாட்.நெட் 2.0 பதிவிறக்கம்)
என்லைட்டைப் பதிவிறக்கவும் (என்லைட் பதிவிறக்கம்)

முதலில் மைக்ரோசாப்ட்.நெட் ஐயும் அதைத் தொடர்ந்து என்லைட் மென்பொருளையும் நிறுவிக் கொள்ளவும். என்லைட்டை டாட்.நெட் இல்லாமல் நிறுவமுயன்றால் டாட்.நெட் சட்டம் இல்லை என்று பிழைச் செய்தி வரும். முதலில் என்லைட்டை ஆரம்பிக்கவும். (Start->All Programs->nLite) next ஐத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் எங்கே விண்டோஸ் இயங்குதளத்தைப் பிரதிபண்ணினீர்களோ அந்த இடத்தைக் காட்டவும். (வன்வட்டில் ஆகக்குறைந்தது 800 மெகாபைட் இடவசதியில்லையென்றையால் ஓர் பிழைச் செய்திகாட்டும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செல்லவும்). மீண்டும் next ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கடைசியாகவுள்ள Create Bootable ISO என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மீண்டும் next ஐத் தேர்ந்தெடுக்கவும் அதில் Mode ஐத் தேர்ந்தெடுக்கவும். Burn Speed இல் ஆகக்குறைந்த வேகத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான் bootable CD இப்போது உருவாகியிருக்கும்.

நீறோ வழிமுறை
நீறோ ஓரளவு பிரபலமான மென்பொருள் என்பதால் இன்னொரு வழிமுறையும் உண்டு. இதற்கு எக்ஸ்பிரஸ் பதிப்பினைப் பயன்படுத்தமுடியாது முழுப்பதிப்பு அவசியம். கீழ்வரும் வழிமுறை இதன் 6 ஆம் பதிப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பதிப்புக்களிற்கு வேண்டிய மாறுதல்களைச் செய்யவும்.

நீறோ ஐ ஆரம்பிக்கவும் (எடுத்துக்காட்டாக Start->All Programs-> Nero 6 Ulta Edition -> Nero Burning ROM)
CDROM (boot) அல்லது DVD-ROM (boot) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
boot (tab) இல் உள்ள image file ஐ என்லைட் நிறுவலில் இருந்து பெற்றுக் கொள்ளவும் (தேடும் பொழுது allfiles என்பதைத் தேர்ந்தெடுக்கவும்).
Enable Expert settings இல் kind of emulation - No emulation, Number of loaded sectors 4 என்றவாறு மாற்றியமைக்கவும்.

அவ்வளவுதான் இப்போது வேண்டிய கோப்புக்களைச் சேர்த்துவிட்டுப் புதிய விண்டோஸ் நிறுவல் இறுவட்டு ஒன்றைத் தயார் செய்துவிடலாம்.