Tuesday, April 28, 2009

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007  சேவைப் பொதி 2 உலகளாவிய ரீதியாக 28 ஏப்ரல் 2009 முதல் பதிவிறக்கக் கிடைக்கின்றது. உங்கள் கணினியில் ஏற்கனவே ஆபிஸ் 2007 இருந்தால் நிறுவிக் கொள்ளலாம் இல்லையென்றால் புதிதாக நிறுவ விரும்பினால் கீழ்க்கண்ட வழிமுறையைப் பின்பற்றவும் ஏனென்றால் இவ்வழிமுறைமூலம் மீண்டும் மீண்டும் சேவைப் பொதியினை நிறுவது அவசியமற்றது இதன் மூலம் நேரத்தை மீச்சப்படுத்திக் கொள்ளுவதுடன் நிறுவும் பொழுதே கணினியைப் பாதுகாப்பான மென்பொருளாக நிறுவிக் கொள்ளலாம். 
  1. முதலில் உங்கள் இறுவட்டில்(CD) இருந்து கணினிக்கு ஆபிஸ் 2007 மென்பொருளைப் பிரதியெடுத்துக் (copy) கொள்ளவும். 
  2. இரண்டாவதாக ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2 ஐப் பதிவிறக்கிக் கொள்ளவும். 
  3. அதிலுள்ள கோப்புக்களை வேறாக்க ஏற்கனவே பதிவிறக்கிய கோப்பினை தட்டச்சுச் செய்வதற்கு இலகுவாக மீளப்பெயரிடவும் (எடுத்துக்காட்டாக office2007sp2-uma.exe)
  4. பின்னர் அந்தக்கோப்புறையில் (Folder) இருந்தவண்ணம் கட்டளையைவிளிபூட்டை இயக்கவும் (Command prompt).  நீங்கள் இதை start->Run->Cmd என்றவாறு வந்து இந்தக் கோப்புறையிற்கு வரவேண்டி ஏற்ப்படலாம். 
  5. இப்போது office2007sp2-uma.exe /extract (நீங்கள் வேறுபெயர் கொடுத்திருந்தால் அந்தப் பெயரால் மாற்றிவிடவும்) என்று கட்டளையைத் தட்டச்சுச் செய்யவும். குறிப்பு: 7-ஜிப் மென்பொருள் சரியாகக் கோப்புகளைப் பிரித்தெடுக்கவில்லை. வேறேதேனும் கோப்புக்களைப் பிரித்தெடுக்கும் பிரயோகங்கள் இருந்து வேலை செய்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும் பின்னர் இப்பதிவினை மேம்படுத்திக் கொள்கின்றேன். இப்போதைக்கு கட்டளைகளூடாக இதைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்ளலாம். 
  6. மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ளவும். மேலேயுள்ள படத்தைப் பார்க்கவும். 
  7. எங்கே பிரித்தெடுத்த கோப்புக்களை வைக்கப் போகின்றீர்கள் என்பதைத் தெரியப்படுத்தவும்.  எடுத்துக்காட்டாக D:\2007SP2
  8. இப்போது நீங்கள் பிரித்தெடுத்த கோப்புக்களை ஆபிஸ் 2007ப் பிரதிசெய்த கோப்புறைக்குள் Update என்ற கோப்புறைக்குள் பிரதிபண்ணவேண்டும். முக்கிய குறிப்பு: இதில் ஏற்கனவே கோப்புக்கள் இருந்தால் அழித்துவிட்டு பின்னர் பிரித்தெடுத்த சேவைப் பொதி 2 கோப்புக்களை போடவும்.
  9. இப்போது மீண்டும் உங்கள் வலையமைப்பூடாகவோ அல்லது டீவிடியிலே இதைப் பிரதிபண்ணிக் கொள்ளவும். அவ்வளவுதான் இனி கணினியில் ஆபிஸ் 2007 நிறுவும் பொழுது ஆபிஸ் 2007 சேவைப் பொதி 2 உடன் நிறுவப்பட்டுவிடும். 

No comments: