Saturday, June 5, 2010

பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாக்குதல் (Computer Assembling)

பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாக்குதல் (Computer Assembling)

பாகங்களை ஒருங்கிணைத்து கணினியை உருவாக்குவது என்பது ஒரு சுவையான அனுபவம். நான் முதன் முதலில் இந்தியாவில் பெங்ளூரில் பாகங்களை ஒருங்கிணைத்துக் கணினியை உருவாகியது 2000 ம் ஆண்டு டிசெம்பர் காலப்பகுதியில். அப்போதே டாம்ஸ்ஹாட்வெயார்.காம் இணையத்தளத்தில் இருந்து தேவையான தகவல்களைச் சேகரித்து எனது பல்கலைக்கழக சீனியர்கள் இருவருடன் சேர்ந்து எனது முதலாவது பாகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிக் கொண்டேன். இதில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் பல. ஒவ்வொரு பாகமும் எப்படி வேலைசெய்கின்றது என்பதை அக்குவேறு ஆணிவேறாக ஆழமாகக் கற்க உதவியது. என்னுடைய தாழ்மையான கருத்துப்படி ஒருவர் பலவருடமாகக் கற்றும் கணினியை ஒருங்கிணைக்கமுடியவில்லை என்றதால் அவர் கற்றதில் அவருக்கே நம்பிக்கையில்லை என்றுதான் அர்த்தம்

இதனால் கிடைக்கும் நன்மைகள்

ஒவ்வொரு முறையும் கணினியைப் பாவிக்கும் போது என்னுடைய முயற்சி என்று தன்னபிக்கையை ஊட்டியவண்ணமே இருக்கும். இது விலைகொடுத்து வாங்கும் கணினிகளில் கிடைக்காது. தன்னபிக்கை இல்லாதவர்களும் தாம் கற்றதிலேயே சந்தேகப்படுவர்களுமே வணிக நிறுவனங்களின் கணினிகளை வாங்குவார்கள். எச்பியோ ஐபிஎம் ஓ ஒன்றும் செயலிகளையோ (புறோசசரை) அல்லது வன்வடுக்களையோ (ஹாட்டிஸ்க்) உருவாக்குவதில்லை அவர்களும் இன்டெலினுடையதோ அல்லது ஏஎம்டியினுடைய் செயலிகளை வாங்கித்தான் பொருத்திக் கொள்ளுகிறார்கள். இவர்களாலேயே ஏதோ செய்யமுடியும் என்றால் உங்களால் அதற்கு மேலும் செய்யமுடியும்.

விரும்பியவாறு கணினியை எமது தேவைக் கேற்ப உருவாக்கிக் கொள்ளலாம். பொதுவாக வணிக நிறுவனங்கள் உருவாக்கும் கணினிகள் பொதுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. அநேகமான வணிக நிறுவனங்களின் கணினிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வன்வட்டினை இணைக்கவியலாது (இதற்கான இடவசதியிருக்காது அல்லது சிலசமயங்களில் போட்டும் - Port உம் இருக்காது). தேவையான பாகங்கள் சரியாக இல்லாமலும் எடுத்துக்காட்டாக டீவிடி ரைட்டர் இல்லாமலோ (டீவிடி போடமுடியாத கணினிகளைக் கூடக் கண்டிருக்கின்றேன்) அல்லது தேவையற்ற பாகங்கள் இணைக்கப்பட்டோ எடுத்துக்காட்டக புளாப்பி டிரைவ் காணப்படும். தவிர கணினி ஒரே டிரைவ்வாக போமட் (format) பண்ணப்பட்டிருக்கும் இதை பல்வேறு பாகங்களாகப் பிரிப்பது கடினமாக சந்தர்பங்களும் உண்டு. வன்வட்டின் அளவு காணாமலோ இருக்கலாம். அண்மையில் வவுனியாவில் 2 டெராபைட் அளவுள்ள வன்வட்டுள்ள கணினியை வெற்றிகரமாக பாகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்கியிருந்தேன். இது நான் மாத்திரம் அல்ல நீங்களும் செய்யக் கூடிய ஒன்றுதான்.

சரியான பாகங்களைத் தேர்ந்தெடுத்து நீண்ட நாட்கள் பணிபுரியமாறு செய்யவைக்கலாம். எடுத்துக்காட்டாக நான் கண்ட வணிகக் கணினி ஒன்றில் வன்வட்டானது அளவுக்கதிமாக இறுக்காமாக இணைப்பட்டுருந்தது. இதனால் வன்வட்டில் ஆயுட்காலம் குறைவடையும் இதனால் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் புதிய வன்வட்டினை விற்றுத்தீர்த்து இலாபமீட்டுக் கொள்வார்கள். மேலும் வணிக நிறுவனங்கள் தேவையில்லாத மென்பொருட்களைப் போட்டுக் கணியைக் குப்பையாக்கி வைத்திருப்பார்கள்.

பணத்தைச் சேமிக்கலாம். வணிக நிறுவனங்கள் தேவையில்லாத பாகங்களைப் போட்டு சொதப்பி வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டக புளாப்பிடிரைவ் - இது எந்த வாடிக்கையாளருக்காவது இக்காலத்தில் தேவையா? இதைவிட புளாப்பி டிரைவ் இல்லாமலே கணினியை உருவாக்கிவிடலாம். நீங்கள் நூதசாலையில் பணிபுரிந்தால் மாத்திரமே இக்காலத்தில் புளாப்பி டிரைகளைக் காணமுடியும் இவ்வாறான வழக்கொழிந்தவற்றையெல்லாம் வாடிக்கையாளரிடம் காட்டி எரிச்சலூட்டுவதைவிட நீங்களே ஒரு சிறந்த கணினியை உருவாக்கிவிடாம். தவிர இவர்களின் கணினியில் ஒட்டியிருக்கும் விண்டோசின் தொடரிலக்க்மும் (அதாங்க சீரியல் நம்பர்) கணினியில் நிறுவப்பட்டிருக்கும் விண்டோஸின் தொடரிலக்கும் அநேகமாக வேறாகவே இருக்கும்.

வினைத்திறனான கணினியை உருவாக்கலாம். அநேகமான வணிகநிறுவனங்கள் ஏதே கிடைப்பதைக் கொண்டி கணினியை உருவாக்கி வாடிக்கையாளரின் தலையில் தள்ளிவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்குமேல் கட்டுக்கதையையும் கட்டிவிடுவார்கள் எடுத்துக்காட்டாக வவுனியா பிசிஹவுசில் சென்றவாரம் சென்றபோது இண்டெல் அட்டம் புரோசசரில் கணினி விளையாட்டுக்கள் விளையாடமுடியாது என்று கூறினார்கள் நான் பரீட்சித்துப் பார்த்ததில் சரிவர வேலைசெய்தது.

செயன்முறை


இந்தவாரம் வவுனியாவில் நானும் ஜெயமுகனும் சேர்ந்து உருவாக்கியிருந்தோம். இது மிக எளிமையான செயற்பாடு என்பதால் அதன் வழிமுறையைக் கீழே தருகின்றேன்.

முதலில் மதர்போட்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போல கணினியின் தாயாக தாய்பலகை என்று பொருள்படும் மதர்போட்டே இருக்கின்றது. நாங்கள் எடுத்துக்கொண்ட இண்டெல் ஆட்டம் மதர்போட் செயலியையும் அதனுடன் இணைந்த சிறிய செயலியைக் குளிர்ச்சிப்படுத்தும் சிறிய மின்விசிறியும் இணைக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு அதிகமான வேலை இருக்கவில்லை. இதைக் கொழும்பில் இலங்கை ரூபா 7, 850 (ஏழத்தாழ 75 அமெரிக்க டாலர்கள்) இற்கு வாங்கியிருந்தோம் தவிர 1ஜிகாபைட் டீடீஆர் 2 நினைவகம் (ராம்) இலங்கை ரூபா 3, 350 (ஏழத்தாழ 30 அமெரிக்க டாலர்கள்) இற்கு வாங்கியிருதோம். கேசிங் இலங்கை ரூபா 2, 600 (ஏழத்தாழ 24 அமெரிக்க டாலர்கள்) இற்கு வவுனியாவில் வாங்கினோம் ஏலவே இருந்த வன்வட்டையும், மொனிட்டரையும் விசைபல்கையும்(கீபோட்) சுட்டி (மவுஸ்) ஐயும் பாவித்தே உருவாக்கினோம். அவ்வளவுதான் சுமார் 2 மணிநேரத்துக்குள்ளாகவே எல்லாம் முடிந்து கணினியும் ஆரம்பித்து சரிவர இயங்க ஆரம்பித்து விட்டது.

No comments: